Friday, January 25, 2008

சிங்கார சென்னையின் ஒளி

ஜனவரி 15/2008, நமது சென்னையில் பொங்கல் திரு நாள். சென்னை அன்று மிக அழகாய் தோற்றமளித்தது. நான் சத்யம் திரையரங்கில் மாலை 6 மணி ஷோ "பிரிவோம் சந்திப்போம்" படம் பார்த்து விட்டு, 9 மணி அளவில் வெளி வந்தென். எனது வாகனத்தில் நான் வலது புறம்,டிரைவர் பின் சீட்டில் அமர்ந்தபடி வந்திருந்தேன்.ஜெமினி மேம்பாலம் ஏறி, அதை சுற்றி இறங்கிய பொழுது சென்னையின் அழகு, சொல்ல வார்த்தை இல்லை. சீரியல் விளக்குகளும் ஆஹா. கார்களில் கருப்பு ஸ்டிக்கரை உரிக்கச்சொன்ன கலைங்கருக்கு நன்றி. சிங்கார சென்னயின் அழகை கண்டேண்.இப்பொழுது எனது கார் 50 KM/ஸ்பீடில் போய் கொண்டிருக்கு. கோடம்பாக்கம் மேம்பாலம் நெருங்கியது.அப்பொழுது என் தோழியை சந்தித்தேன்.இருவரும் ஒன்றாகவந்தோம்.என் வாகனத்தை விட வேகமாக, இணையாகவும் வந்தாள்.எனது வானத்தில் அப்பொழுது வசீகரா பாட்டு ஒலித்தது.தோழியுடன் நானும் மகிழ்ந்தபடி வந்துகொண்டிருந்தேன்.திடிரென்று வடபழனி ஒண்வேயில் என் தோழி வேறு வழியில் சென்று விட்டாள். தனிமையில் கண்களை முடி பாடலை ரசித்து கேட்டு வந்தேன்.அப்பொழுது எனது வாகனம் 60KM/ஸ்பீடில் போக தொடங்கியது. கே.கே நகரில் ஒரு வளைவில் திரும்பிய பொழுது,மறுபடியும் என் தோழியை சந்தித்தேன்.அவள் மலர்ந்த முகத்தைரசித்தேன்.வேகம் அதிகரிக்க மறுபடியும் தோழியை தவரவிட்டேன். எங்கு சென்றாள் என்று தெரியவில்லை. செ ...... விருகம்பாக்கம் வளைவில் திரும்பியபொழுது என் வாகனத்தில் கண்டுகொண்டேன் பாடல் ஒளித்தது. அதர்க்கு இணையாக நானும் என் தோழியை கண்டேன். மிக்க மகிழ்ச்சியில் அவளை பார்த்து சிரித்த படி வந்தேன். ஆழ்வார்திருநகரில் வ்ழது திரும்ப மீண்டும் மறைந்தாள்.எனது வீட்டு வாசலில் எனது வாகனம் நிற்க நான் வெளியே வர ........................................................... என்ன விந்தை. மீண்டும் என் தோழி.அவளின் மலர்ந்த முகம்.... அப்ப அப்பா கொள்ளை அழகு. இவளுக்கு ஒன்வே இல்லை. சிக்னல்கள் இல்லை. என்னிடம் கண்ணாமூச்சி விளையாடினாள்.இங்கு அவள் ரன்னர். அவள் என் கண்களிலிருந்து மறைந்தாள். ஆனால் அவள் கண்ணில் இருந்து நான் மறையவில்லை.அதான் என் வீடு வரை என்னை பின்தொடர்ந்து வந்துவிட்டாள்.........அவள் தான் ஒளிக்கே ஒளி தரும் நிலா..... வெண்ணிலா."பிரிந்தோம் சந்தித்தோம்" நன்றியடி உன் இரவு நேர சேவைக்கு.இந்த உலகத்தின் முதல் இரவு நேர பெண் காவலர் நீ தானடி. நீ வேற்று கிரகம் அல்ல ....... என் அன்புத்தோழி என்று கூறி 'பை” சொல்லி வீட்டுக்குள் சென்றேன்.

Thursday, January 24, 2008

Am Tharaniyadurai.Presently doing my MBA at LIBA.Home town is Chennai. I love chennai. my first blog would be about chennai.